தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில்  செயற்கை கை, கால் பொறுத்துநர் பணிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை

மருத்துவ தேர்வு வாரிய உறுப்பினர் செயலரால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள  செயற்கை கை, கால்

எஸ். பாண்டியன்

மருத்துவ தேர்வு வாரிய உறுப்பினர் செயலரால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள  செயற்கை கை, கால் பொறுத்துநர் (பிரஸ்தடிக் க்ராப்ட்ஸ்மென்) பணிக்காலியிடத்திற்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இப்பணிக்காலியிடத்திற்கு மேல் கல்வித் தேர்ச்சி பெற்று தொழில் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு வருட பிரஸ்தடிக் கிராப்ட்ஸ் ஆதோடிக்ஸ் பிரிவில் பட்டயம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

மேலும், இப்பணியிடத்திற்கு 1.7.2015 அன்றைய நாளில் எஸ்.சி.எ, எஸ்.சி.ஓ, எம்.பி.சி, பி.சி.எம், பி.சி.ஓ ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கான மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 29.6.2015 வரையில் பதிவு செய்துள்ள அனைத்து பிரிவினரும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி மற்றும் உத்தேச பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சூலக்கரை தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்திற்கு 6-ம் தேதிக்குள் அனைத்து கல்விச் சான்றுகளுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளும்மாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT